சச்சின் - காம்ப்ளி வாழ்க்கையை தழுவி திரைப்படம் இயக்கும் கவுதம் மேனன்

சச்சின் -  காம்ப்ளி வாழ்க்கையை தழுவி திரைப்படம் இயக்கும் கவுதம் மேனன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் கவுதம் வாசுதேவ் மேனன். காதல், ஆக்‌ஷன் என கலவையான கதைகளில் படம் இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் அவரது இயக்கத்தில் வெளி வர உள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். 

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் இருந்தது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.  இந்த திரைப்படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

சச்சின் -  காம்ப்ளி வாழ்க்கையை தழுவி திரைப்படம் இயக்கும் கவுதம் மேனன்

இந்நிலையில், கவுதம் மேனன் அடுத்ததாக கிரிக்கெட் கதையை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதை சச்சின் மற்றும் கம்ப்லி இருவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இயக்க உள்ளதாக கூறினார்.

Share this story