சிம்புக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

str 49

சிம்பு நடிக்கும் STR49 படத்தில் டிராகன் படம் மூலம் புகழ்பெற்ற கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிலம்பரசன் தற்போது அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனை அண்மையில் சந்தானம் உறுதி செய்திருந்தார்.  



இந்நிலையில்,  இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக  டிராகன் படம் மூலம் புகழ்பெற்ற கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டிராகன் படத்திற்கு பின்  கயாடு லோஹர்-க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story