கேப்டனின் உடலை தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்!
1703833921520

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடலை, தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ள கேப்டனின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடலை கோயம்பேடு ஜவஹர்லால் நேரு ஹைரோட்டில் உள்ள அவரது கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி மன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.