ஜிடி நாயுடு பயோபிக்கில் நடிகர் மாதவன்.. மிரட்டலான போஸ்டர் வெளியீடு !

gd naidu

ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் மாதவன் நடிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பிரபல விஞ்ஞானியாக இருப்பவர் ஜி.டி.நாயுடு.. கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பதை சுருக்கி ஜி.டி.நாயுடு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் சாதனை புரிந்த தமிழராக இருந்தவர். கோவையை சேர்ந்த அவர், பேருந்தே இல்லாத நேரத்தில் பேருந்தை இயக்கியவர். இன்றைக்கும் தமிழர்கள் கொண்டாடும் அறிவியல் விஞ்ஞானியாக இருக்கிறார். 

gd naidu

இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் ஜிடி நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விமலின் ‘காவல்’ படத்தில் நடித்த நடிகை கீதா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் இயக்குனர் ஜவஹர் மித்ரன் இந்த படத்தை இயக்கவுள்ளார். 

gd naidu

 மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதாசிரியராக இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்திற்காக ஜிடி நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் படத் தயாரிப்பு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதையொட்டி புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story