கேடி.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் ‘ஜென்டில் மேன் 2’... மோஷன் போஸ்டர் வெளியீடு !

‘ஜென்டில் மேன் 2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்த வெற்றிக்கு பிறகு 30 ஆண்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த கேடி குஞ்சுமோன், இரண்டாம் உருவாகி வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த படத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக பணயாற்றி வருகிறார். இந்தப் இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. கோகுல் கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி மற்றும் பிரியா ஆகிய இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். மலையாள நடிகர் சேத்தன் சேனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.