‘ஜென்டில் மேன் 2’ கம்போசிங்கை தொடங்கிய கீரவாணி.. விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் !

gentleman 2

‘ஜென்டில் மேன் 2’ படத்தின் கம்போசிங் பணிகளை கீரவாணி தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி நடிகரான அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜென்டில்மேன்'. கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ஷங்கர் இயக்கினார். தனது முதல் படத்திலேயே பிரம்மாண்டத்தை காட்டி ரசிகர்களை அசரவைத்தார். இப்படத்தில் மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரித்த இப்படம் வசூல் சாதனை படைத்தது. 

gentleman 2

இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அறிவித்தார். இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. கோகுல் கிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gentleman 2

இந்த படத்தில் மலையாள நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி மற்றும் பிரியா ஆகிய இரு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.  மலையாள நடிகர் சேத்தன் சேனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பாகுபலி பட இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ‘ஜென்டில் மேன் 2’ மியூசிக் கம்போசிக் பணிகளை எம்.எம்.கீரவாணி தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story