‘பிரம்மன் படைச்சதுல ஒன்னு மட்டும் ரொம்ப அழகு’- காஜல் அகர்வாலின் ‘கோஷ்டி’ பட வீடியோ பாடல் வெளியீடு.

photo

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ளகோஸ்டிபடத்திலிருந்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

photo

குலேபகாவலி, ஜாக்பாட்ஆகிய படங்களை இயக்கிய  கல்யாண் இயக்கத்தில், நடிகை காஜல் அகர்வால்,இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம்கோஸ்டிஇந்த படத்தில்,யோகிபாபு, கே. எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, தேவதர்ஷினி, மதன்பாபு, ஊர்வசி என  பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். காமெடி மற்றும் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

photo

இந்த நிலையில் சமீபத்தில்கோஸ்டிபடத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது,’பிரம்மன்என தொடங்கும் இந்த பாடலில் யோகிபாபு, காஜல் அகர்வால், ரெடிங்கிங்ஸ்லி, ஜகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படலுக்கு சாம் சி எஸ் பாடல் வரிகள் எழுதியுள்ளது கூடுதல் சிறப்பு. டீசரை போன்று இந்த பிரம்மன் பாடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story