20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸாகும் கில்லி
1707720709309
ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த விஜயை பக்கா ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெறச் செய்த படம் கில்லி. விஜய்யின் சினிமா கேரியரை மேலே உயர்த்தியதில் கில்லி படத்திற்கு முக்கியப் பங்குண்டு. 2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்போதும் டிவியில் கில்லி திரைப்படம் ஒளிபரப்பாகும் போதெல்லாம் டிஆர்பி எகிறும். அந்தளவிற்கு எவர் க்ரீன் படமாக மக்கள் மனதைக் கவர்ந்துள்ளது இந்தப் படம்.
இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.