ரெட்ரோ’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது!

retro

சூர்யாவின் ரெட்ரோ படத்திலிருந்து கண்ணாடிப் பூவே எனும் பாடல் வெளியாகி உள்ளது.

கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதனை சூர்யா – ஜோதிகாவின் 2D நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.


காதல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்து படமானது 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story