‘ரெட்ரோ’ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் ப்ரோமோ வெளியீடு

surya

‘ரெட்ரோ’ படத்தில் இடம்பெற்றுள்ள  ‘கண்ணாடி பூவே’ பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.  surya

இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. பின்பு அதே ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகியிருந்தது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் பாடல் உரிமையை பிரபல நிறுவனமான டீ - சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் இந்தி மற்றும் தெலுங்கு மொழியில் டைட்டில் டீசர் வெளியானது. 


இதனைத் தொடர்ந்து படக்குழு மேக்கிங் வீடியோவை காமிக்ஸ் வடிவத்தில் வெளியிடத் திட்டமிட்டதன் பேரில் முதலில் வெளியான ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ சிறிய வீடியோவின் காமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டிருந்தது. இப்படி தொடர்ந்து அப்டேட் தந்து வரும் படக்குழு படத்தின் முதல் பாடல் ‘கண்ணாடி பூவே’ காதலர் தினத்தை முன்னிட்டு நாளை(13.02.2025) வெளியாகும் எனத் தெரிவித்தது. 

இந்த நிலையில் முதல் பாடலின் புரொமோவை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சிறையில் இருக்கும் சூர்யா தன் காதலியை நினைத்துப் பாடுவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியிருக்க விவேக் எழுதியுள்ளார். மெலோடி பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
 

Share this story