“நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்” –‘கேப்டன் மில்லர்’ அப்டேட் கொடுத்த ஜி.வி பிரகாஷ்.

photo

கேப்டன் மில்லர் பட பாடல் பணிகள் துவங்கியதாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

photo

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ்நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்இவர்களுடன்இணைந்து  சிவ ராஜ்குமார்சந்தீப் கிஷன்ஜான் கொக்கன்நிவேதா சதீஷ்ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் படத்தின் சமீபத்திய அப்டேட்டாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் படத்தின் பாடல் பணிகள் துவங்கியுள்ளதை குறிப்பிட்டு பாடல் வரிகளை இணைத்துள்ளார். அதில்

“ நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்….

நீ படையோட வந்தா சவ மழ குவியும்..”

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

என்ற மாஸ் வரிகள் இடம்பிடித்துள்ளது.

Share this story