பாலிவுட்ட் பக்கம் திரும்பிய ஞானவேல் ராஜா

பாலிவுட்ட் பக்கம் திரும்பிய ஞானவேல் ராஜா

பருத்திவீரன் படம் வெளியாகி கிட்டதட்ட 17ஆண்டுகள் ஆகும் நிலையில் விடாது கருப்பாக இன்னும் அந்த படம் குறித்த பஞ்சாயத்து ஓயாமல் இருந்து வந்தது. அதிலும் சில நாட்களாக அது உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் அமீர் குறித்து பேசியதற்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ” திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது எம்மாதிரியான வருத்தம்? இதன் மூலமாக அமீர் அண்ணனுக்கு ஞானவேராஜா செல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்த கடிதம் யாருக்கு?” என சசிகுமார் தொடர்ந்து கேள்விகள் எழுப்பினார்.இதையடுத்து இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது. 

பாலிவுட்ட் பக்கம் திரும்பிய ஞானவேல் ராஜா

தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மும்பையில் உள்ளாராம். அடுத்தடுத்து பாலிவுட்டில் 4 திரைப்படங்களை அவர் தயாரிக்க உள்ளாராம். 
 

Share this story