ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- கரு. பழனியப்பன் அறிக்கை

ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- கரு. பழனியப்பன் அறிக்கை 

18 ஆண்டுகள் கழித்து பருத்திவீரன் பட இயக்குநர் அமீர் மற்றும் அப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சமுத்திரகனி, சசிகுமார், சுதாகொங்காரா, நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கண்டனத்தை பதிவு செய்தும் உள்ளனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- கரு. பழனியப்பன் அறிக்கை 

தற்போது இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதராக பதிவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம் ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் கேரக்டர் அசாசினேஷன் செய்வது அயோக்கியத்தனம்.  பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவெளியில் ஞானவேல், அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Share this story