அமீரிடம் வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர் 'ஞானவேல் ராஜா'.

பருத்திவீரன் பிரச்சனை தொடர்ந்து வந்த நிலையில் இயக்குநர் அமீரிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பருத்திவீரன் படம் வெளியாகி கிட்டதட்ட 17ஆண்டுகள் ஆகும் நிலையில் விடாது கருப்பாக இன்னும் அந்த படம் குறித்த பஞ்சாயத்து ஓயாமல் இருந்து வந்தது. அதிலும் சில நாட்களாக அது உச்சம் தொடவே பலரும் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். குறிப்பாக சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி, பொன்வண்ணன் ஆகியோர் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அமீர் குறித்து பேசியதற்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். அதில்” பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது நாள்வரை நான் வாய்திறக்கவில்லை. அவர் சமீபத்தில் பேசிய பேட்டியில் என்மீது பொய்யான குற்றசாட்டுகளை சுமத்தியிருந்தார் அது என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு தான் நான் பதிலளித்தேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் அவரை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.