பயணம் செல்லுங்கள்.... ரசிகர்களுக்கு ராஷ்மிகா அறிவுரை...
1698652012748

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக அவர் 'அனிமல்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. 'புஷ்பா 2' படத்தில் நடித்து வரும் அவர், 'ரெயின்போ', 'கேர்ள்ஃபிரண்ட்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பயணம் மேற்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் தான் இருக்கும் புகைப்படங்களைவெளியிட்டுள்ள அவர், ' நான் பயணம் மேற்கொள்ள முடியாமல் இருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செல்லுங்கள். உங்கள் சொந்த ஊருக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ, அல்லது உங்கள் கனவு பயண இலக்குக்கோ செல்லுங்கள். பயணம், உங்கள் அறிவையும் மனதையும் திறக்கும் என்று அவர் கூறியுள்ளார்.