ஆட்டநாயகனின் ஆட்டத்துடன் "மட்ட.."- கோட் படத்தின் 4வது சிங்கிள்

GOAT

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தனர். இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும். இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும், மங்காத்தா படம் வெளியான தேதியில் கோட் படத்தின் 4வது பாடல் வெளியாகவுள்ளதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் எனவும் இயக்குனர் வெட்கெட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடலான "மட்ட" இன்று  மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து, அச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில், " பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்" என்றும் மட்ட பாடல் இன்று  மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாடலாசிரியர் விவேக்," இது இளையதளபதியின் ப்ளாஸ்ட்.. ஆட்டநாயகன் நடனத்திற்காக காத்திருங்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Share this story