ப்ரீ புக்கிங் வசூலில் பட்டையை கிளப்பும் G.O.A.T.. இத்தனை கோடியா

Vijay
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகெங்கும் பிரமாண்டமாக வெளிவரவுள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவன தயாரித்துள்ளது. மேலும் யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன் என பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன்களுக்கும் மேல் பார்வையாளர்களை G.O.A.T ட்ரைலர் பெற்றுள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி  G.O.A.T படம் வெளிவரவுள்ள நிலையில், வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இதுவரை வெளிநாடுகளில் நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 5.86 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் G.O.A.T திரைப்படம். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஒப்பனிங் என சொல்லப்படுகிறது.

Share this story

News Hub