'கோட்' வெற்றி விழா கொண்டாட்டம்: விஜய் பங்கேற்பு..!

vijay

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு மாதம் கழித்து படக்குழுவினர் வெற்றியை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ‘கோட்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று வெற்றி விழா நடந்த நிலையில், சமூக வலைதளங்களில் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் மற்றும் ராகுல் உள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு கேக் ஊட்டும் காட்சியும் இந்த வீடியோவில் எல்லாம் பெற்றுள்ளதை அடுத்த இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Share this story