விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த கோட் டீம்.. என்னவா இருக்கும்?

GOat team

தி கோட் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் மறைந்த நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தி கோட் (The Greatest of all time). யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.


சமீபத்தில் தி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்ற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் உள்ளிட்டோர் இன்று (ஆக.19) பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

Share this story