மாலை 5 மணிக்கு வெளியாகும் கோட் ட்ரைலர் - வீடியோ அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்...!
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
Roger that. Ready to explode from today 5 PM 🔥#TheGoatTrailer is releasing in 6 hours 💥@actorvijay Sir
— Archana Kalpathi (@archanakalpathi) August 17, 2024
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production@archanakalpathi… pic.twitter.com/Xpz6fGaDlM

திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதனையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ட்ரைலர் அறிவிப்பு வீடியோ ஒன்றை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். இந்த டிரைலருக்காக விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.