100 மில்லியன் பார்வைகளை கடந்த கோல்டன் ஸ்பாரோ... புதிய சாதனை...!

golden sparrow

`நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'  படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் இணையத்தில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. 

ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கிய  திரைப்படம் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' .   ராம் காம் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்தர், ப்ரியா வாரியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.   இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் செம்ம வைரலானது. 



இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார். பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இப்பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது. இதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கோல்டன் ஸ்பேரோ பாடலை பாடியவர் சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார்.

Share this story