‘கோல்டன் ஸ்பேரோ’ வீடியோ பாடல் வெளியானது..!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்க அனிதா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் வெளியான நாள் முதலில் இருந்தே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது. அதில், பிரியங்கா அருள் மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில், அப்பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.