கோலி சோடா வெப் சீரிஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Goli soda

விஜய் மில்டன் இயக்கத்தில் சேரன், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கோலி சோடா ரைசிங்’ வெப் சீரியஸ் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரியஸ் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'கோலி சோடா ரைசிங்’ டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவகம் அமைக்க நினைக்கும் நான்கு சிறுவர்கள் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கோலி சோடா படத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள் தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்து, வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்க தீர்மானிக்கின்றனர்.

நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான குண்டர் கும்பலின் தலைவராக தோன்றுவதையும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. இந்த பரபரப்பான தொடரில் 'குக்கு வித் கோமாளி' புகழ் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்துள்ளார்.ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் SN அருங்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் KL படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரியஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது. விஜய் மில்டனின் கோலி சோடா படம் நல்ல வெற்றியை பெற்றது. சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this story