விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா ரைசிங் வெப் தொடர்
1724579434000
இயக்குனர் விஜய் மில்டன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர் 2014 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படங்களின் தொடர்ச்சியாகவே அமைந்து இருக்கிறது. படத்தின் டீசர் இன்று வெளியாகியது. இத்தொடர் விரைவில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. தொடரில் சேரன், புகழ், அம்மு அபிராமி, ஜான் விஜய், அவந்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்க்ளுடன் படத்தின் நாயகனான கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி மற்றும் முருகேஷ் நடித்துள்ளனர். இத்தொடர் கோலி சோடா 1 படத்தின் அடுத்ததாகவும் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.