ரூ. 200 கோடி வசூலை அள்ளிய 'குட் பேட் அக்லி'...!

அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரூ. 200 கோடி வசூலை கடந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூலை பெற்று வருகிறது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். கூடவே பிரசன்னா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் ,ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருந்தனர்.
The MASS SAMBAVAM is shaking the box office ❤🔥#GoodBadUgly hits 200 CRORES WORLDWIDE GROSS 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 18, 2025
Book your tickets for #GoodBadUgly now!
🎟️ https://t.co/jRftZ6vpJD#200crGrossForGBU#BlockbusterGBU#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @gvprakash… pic.twitter.com/CUrTW1NB2D
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கடந்த பத்தாம் தேதி படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பெரும் பாராட்டை பெற்றது. அஜித் கேரியரில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது .தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது உலக அளவில் இந்த படம் 200 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.