குட் பேட் அக்லி : அஜித் அணிந்துள்ள சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா ?

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசரில் அஜித் அணிந்துள்ள சட்டையின் விலை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் டீசர் வெளியானது.
குட் பேட் அக்லி படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டீசரில் அஜித் அவரது மாபெரும் வெற்றிப் படங்களான பில்லா, அமர்க்களம், தீனா கெட்டப்-களில் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும், ரெட் படத்தில் அஜித்தின் பஞ்ச் வசனமான அது என்பதும் இடம்பெற்றிருந்தது.
Ivlo rate ah 🤯#Ajithkumar #GoodBadUgly pic.twitter.com/M46VkAafll
— Bala Belfort (@Thala7895) March 2, 2025
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் இப்படத்தின் டீசரில் அஜித் ஒரு கலர்புல்லான சட்டை ஒன்றை அணிந்திருப்பார். அந்த சட்டையின் விலை என்ன என்பது பற்றி தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. அந்த கலர் புல்லான ஒரு சட்டையின் விலை 1 ,80 ,000 ரூபாயாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்கில் இருக்கின்றனர்.ஒரு சட்டையின் விலை இவ்வளவா என அதிர்ச்சியில் இருக்கின்றனர்