'குட் பேட் அக்லி' படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்... படம் எப்படி இருக்கு...?

ak

அஜித் குமார் நடிப்பில் இன்று வெளியாகுட் 'பேட் அக்லி' திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட், பேட் அண்ட் அக்லி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. படம் இன்று வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் களைகட்டியது. படம் குறித்து ரசிகர்கள் கூறுகையில், “அஜித்குமாரை இவ்வாறு பார்க்க வேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்த்தோம். படத்தின் அனைத்துக் காட்சிகளும் சூப்பராக இருந்தது.

 


இந்தப் படத்தின் முதல் பாதி சூப்பராக இருந்தது. 'காட் பிளெஸ் யூ' பாடல், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையும் சூப்பராக உள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை வைத்து ஒரு நல்ல பேன் பாய் திரைப்படத்தை இயக்கியுள்ளார்” என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

Share this story