'குட் பேட் அக்லி' பர்ஸ்ட் சிங்கிள் விரைவில்... படக்குழு கொடுத்த அப்டேட்...

ajith

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் டீசர் வெளியானது. குட் பேட் அக்லி படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டுகளை அள்ளிவிட்டனர். இந்த டீசரில் அஜித் அவரது மாபெரும் வெற்றிப் படங்களான பில்லா, அமர்க்களம், தீனா கெட்டப்-களில் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும், ரெட் படத்தில் அஜித்தின் பஞ்ச் வசனமான அது என்பதும் இடம்பெற்றிருந்தது. 

  ajith
 
இந்நிலையில்,  குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இன்னும் 30 நாட்களே இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ள படக்குழு, பர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story