இணையத்தில் வெளியான `குட் பேட் அக்லி' படத்தின் HD ப்ரிண்ட் லீக் -அதிர்ச்சியில் படக்குழு...!

`குட் பேட் அக்லி' படத்தின் HD ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி” இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார்.
திரைப்படம் வெளியாகி இன்னும் 1 நாள் கூட முடிவடையாத நிலையில் படத்தின் HD ப்ரிண்ட் வீடியோவை இணையத்தில் தற்பொழுது லீக் ஆகியுள்ளது. இது ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி அனைத்து திரைப்படங்களும் வெளியான முதல் நாளே ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே படத்தின் HD பிரிண்ட் வெளியானால் மக்கள் திரையரங்கிள் சென்று பார்க்கும் எண்ண வெகுவாக குறையும். இது சினிமாத்துறைக்கு பெரும் அச்சமாக நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. பெரும்பாலும் இவ்வாறு பைரசி மூலம் படங்களை பார்ப்பது தவிர்ப்போம். படத்தை முறையாக திரையரங்குகளிலும் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளியான பிறகு பார்த்து சினிமாவிற்கும் சினிமாத்துறைக்கும் நம்முடைய ஆதரவை கொடுப்போம்.