குட் பேட் அக்லி : இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மாஸ் அப்டேட்

ajith

ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன், பிரசன்னா , அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். தற்பொழுது ஜிவி பிரகாஷ் செய்த எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் மலேசியா கான்சர்ட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார். அதில் ரசிகர் ஒருவர் குட் பேட் அக்லி திரைப்படத்தின் பணிகள் எப்படி சென்றுக் கொண்டு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

null



அதற்கு ஜி.வி பிரகாஷ் அளித்த பதில்தான் இங்கே ஹைலைட். அதற்கு அவர் " செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம் பெற்ற செலேப்ரேஷன் ஆஃப் லைஃப் பிஜிஎம்-க்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும்.. செம்மயா இருக்கும் ல " என பதிலளித்தார். இதனால் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் ஹைப்பில் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து பிஜிஎம்-ற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் இடம் பெற்ற பாடல்களும் ஹிட்டானது. 

Share this story