'குட் பேட் அக்லி' புதிய ப்ரோமோ வெளியிட்ட படக்குழு...!

ajith

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

 ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது  


அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.  இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் எனவும் டீசரின் நீளம் 1.34 நிமிடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் ரசிகர்களின் ஆவலை தூண்டும் வகையில் குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு  வெளியிட்டுள்ளது.  

Share this story