‘குட் பேட் அக்லி’ ரிலீஸ்... ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஷாலினி அஜித்...!

‘குட் பேட் அக்லி’ படம் வெளியான நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஷாலினி அஜித் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட்-பேட்-அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிபடுத்தியது.
இந்த நிலையில் இப்படம் இன்று(10.04.2025) வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. திரையரங்க வளாகத்திற்குள் வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் பேனர் வைத்தும் கேக் வெட்டியும் மேலதாளத்துடன் அதிகாலை முதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
VETRI 💥💥💪🏻
— Mythri Movie Makers (@MythriOfficial) April 10, 2025
The team of #GoodBadUgly receives a standing ovation and huge applause along with the chants of 'AK AK AK AK' ❤️🔥#AjithKumar #AdhikRavichandran #GoodBadUgly #MythriMovieMakers pic.twitter.com/IN5aLJFc3b
இந்த சூழலில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் தாஸும் திரையரங்கில் ரசிகர்கள் உடன் படம் பார்த்தனர். அவர்களைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.