ஐதராபாத் ஓவர்: அடுத்து ஸ்பெயின் பறக்க போகும் 'குட் பேட் அக்லி' டீம்...

Ajith

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்து தற்போது ஸ்பெயின் பறக்க தயாராகிவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது இரு படங்கள் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் - திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இடையில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் ஏற்பட்ட காலதாமதத்தால், அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் நடிகர் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் திட்டமிடப்பட்டதற்கும் முன்னதாகவே படப்பிடிப்பை மே மாதமே துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 Good bad ugly
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக ஐதராபாத்தில் மான்டேஜ் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து படக்குழுவினர் ஸ்பெயின் பறக்க உள்ளனர். அடுத்த வாரத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது. 70% படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  

Share this story