`குட் பேட் அக்லி' ஸ்பெஷல் : திருப்பூர் மற்றும் ஈரோட்டில் பெண்களுக்கு பிரத்யேக முதல் சிறப்பு காட்சி ஏற்பாடு

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள `குட் பேட் அக்லி' திரைப்படம் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் பெண்களுக்கான பிரத்யேக முதல் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
Inum book panalaya?🧐message #WGBU to the number mentioned there!
— Sri Sakthi Cinemas Erode (@AbiramiErode) April 6, 2025
Book your tickets now 🎟️ link in BIO 💥 #April10th meet panalam 🤙🏻🔥on namma @AbiramiErode#Ajithkumar #AK #GoodBadUgly #GBU #GoodBadUglyTeaser #GoodBadUglyTrailer #OGSambavam #GodBlessU pic.twitter.com/TO4Lyeo1Wq
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் , திருப்பூர் மற்றும் ஈரோட்டில் பெண்களுக்கான பிரத்யேக முதல் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.