டிரெய்லர் ரிலீசுக்கு நேரம் குறித்த 'குட் பேட் அக்லி' படக்குழு...!

ak

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. 



நீண்ட காலம் கழித்து ரசிகர்களுக்கான படத்தில் அஜித் நடித்திருப்பதால் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவு ஏப். 4 ஆம் தேதி இன்று இரவு 8 மணிக்கு துவங்கவுள்ளது. அதைத்தொடர்ந்து படத்தின் டிரெய்லர் இன்று இரவு 9.01 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story

News Hub