32 ஆண்டு திரைப்பயணம் - அஜித்திற்கு `குட் பேட் அக்லி' படக்குழு வாழ்த்து

Ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படக்குழு அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருந்தது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. விடாமுயற்சி படம் அஜித்தின் 62வது படமாக உருவாகிறது. லைகா தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானைத் தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்துக் கொண்டே தனது 63வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் 32ஆம் ஆண்டு திரைப்பயணத்திற்கு ‘குட் பேட் அக்லி’ படக்குழு, வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் இன்றை வெளியிட்டுள்ளது.

Share this story