கோலிவுட்டில் அதிக பார்வைகளை கடந்த குட் பேட் அக்லி டீசர்..!

AK

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர், கோலிவுட்டில் அதிக பார்வைகளை கடந்த  டீஸர்  பெருமையை கைப்பற்றியுள்ளது. 

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.அஜித்குமார் விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே கமிட் ஆன திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 


இந்த சூழலில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியானது. இந்த டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான 24  மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


இதுவரை கோலிவுட் திரைப்படங்களில் அதிகபடியான பார்வைகளை பெற்ற டீசராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது.


 

Share this story