இணையத்தை கலக்கும் குட் பேட் அக்லி டீசர்... அஜித் ரசிகர்கள் உற்சாகம்...!

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விடாமுயற்சி. ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.அஜித்குமார் விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே கமிட் ஆன திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் தோற்றமும், அவரது கெட்டப்பும் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில், குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியான 15 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. குட் பேட் அக்லி படத்தின் டீசரைப் பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த டீசரில் அஜித் அவரது மாபெரும் வெற்றிப் படங்களான பில்லா, அமர்க்களம், தீனா கெட்டப்-களில் வருவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும், ரெட் படத்தில் அஜித்தின் பஞ்ச் வசனமான அது என்பதும் இடம்பெற்றிருந்தது.
Maamey...
— Mythri Movie Makers (@MythriOfficial) March 1, 2025
THARAMAANA SAMBAVAM 💥💥💥#GoodBadUglyTeaser TRENDING #1 on YouTube with 25 MILLION+ VIEWS ❤️🔥
▶️ https://t.co/evp1QJiedb#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩
A @gvprakash Musical ❤️🔥
#AjithKumar… pic.twitter.com/NY7RzCS6tf
இதனால், ஆதிக் ரவிச்சந்திரனை பாராட்டி வருவதுடன் இதுதான் உண்மையான ஃபேன்பாய் சம்பவம் என்றும் பாராட்டி வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.