'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு...!

ak

அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் அப்டேட்  வெளியாகியுள்ளது. 

'விடாமுயற்சி' படத்தை  தொடர்ந்து அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'விடாமுயற்சி' திரைப்படம் தள்ளிப் போனதால் 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. gub

இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குட் பேட் அக்லி படக்குழு நடிகை திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டது. நடிகை திரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 



இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதன்படி குட் பேட் அக்லி பட டீசர் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story