நாளை 'குட் பேட் அக்லி' ரிலீஸ்... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு...!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித்குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட்பேட் அக்லி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
It's AK SAMBAVAM in theatres from tomorrow 🔥🔥#GoodBadUgly Grand release worldwide tomorrow ❤🔥 pic.twitter.com/mUhaNGcm9w
— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2025
படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மேல் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 19 நிமிடங்களாக அமைந்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதை முன்னிட்டு, புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.