அஜித்தின் 'GOOD BAD UGLY' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகர் அஜித் குமாரின் ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.
நடிகர் அஜித் குமாரின் 63 வது படம் ‘GOOD BAD UGLY’ . இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். அஜித் நடிக்கும் Good Bad Ugly திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த லுக் உள்ளது. மேலும் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ள மேசை ஒன்றில் கை வைத்து அஜித் நிற்கிறார். கைகள் முழுவதும் டாட்டூ பதிக்கப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இடப்பக்கம் உள்ள அஜித் கெட்டவன் போலவும், வலப்பக்கம் உள்ள அஜித் அக்லியாகவும் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.