உணர்வுப்பூர்வமான படமாக உள்ளது ‘குட் நைட்’... படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் பாராட்டு !

good night

நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ‘குட் நைட்’ படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் நைட்’. குறட்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

good night

இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பக்ஸ் பகுவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

good night

இந்நிலையில் ‘குட் நைட்’ படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘குட் நைட்‘ படத்தை பார்த்தேன். இந்த கலகலப்பாகவும், மனதிற்கு பிடித்தமானதாகவும், உணர்புப்பூர்வமாகவும், யதார்த்தமாகவும் உள்ளது. படத்தில் நடித்த மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

 

Share this story