கோபி - சுதாகர் நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

parthibangal

யூடியூப் தளத்தில் நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் கோபி -சுதாகர். 

யூடியூப்- ஐ தாண்டி வெள்ளித்திரையில் திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர். அதன்படி பொது மக்களிடம் பணம் வசூலித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டனர். இருவரின் முயற்சிக்கு அதிக தொகை கிடைத்த போதிலும், அந்தப் படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Bcautiful ) என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார். முன்னதாக இந்தப் படம் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தின் பெயர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்தடுத்த தகவவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Share this story