கவுண்டமணியின் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டிரெய்லர் அப்டேட்

goudanmani

நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'.இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ரவிமரியா யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம்  நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.


 

இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜகோபால் சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மறறும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அரசியல் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவிராஜா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் பிப்ரவரி 4 ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் பிப்ரவரி மாதத்திலேயே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story