"விக்ரம் படம் வெளி வந்த பிறகுதான் அடுத்த படம்" -கௌதம் மேனன்

vikram

கோலிவுட்டின் வெற்றி பட இயக்குனர் கவுதம் மேனன் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்
இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் .இவர் இயக்கத்தில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா முதல் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் வரை வசூலில் சக்கை போடு போட்டது .இந்நிலையில் திடீரென்று அவர் நடிக்க தொடங்கினார் .இதற்க்கிடையே நடிகர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை 2017ம் ஆண்டு துவங்கினார் .இந்த படம் முடிவடைந்ததும் நிதி சிக்கலால் வெளிவராமல் இருக்கிறது .2023ம் ஆண்டு வெளியாகும் நேரத்தில் திடீரென மீண்டும் நிதி சிக்கலை சந்தித்து அந்த படம் ரிலீஸ் தள்ளி போனது .
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் "  துருவ நடசத்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு பிறகு தான் நான் மற்ற வேலைகளை தொடங்க போகிறேன். நான் அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.திரைப்படத்தை முதலீட்டாளர்களிடம் காண்பித்தோம் அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீதுள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து வருகிறோம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகி மக்களின் வரவேற்பை பெரும் என்று கூறினார் .நாமும் கூடிய விரைவில் படம் வெளியாக அவரை வாழ்த்துவோம் 


 

Share this story