தமிழில் கதாநாயகியாகும் கௌதமியின் மகள்.. யார் அவர் தெரியுமா ?
பிரபல நடிகையான கௌதமியின் மகள் விரைவில் தமிழில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் ஒருவர் கௌதமி. ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த 1998-ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை கௌதமி திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசனை கௌதமி திருமணம் செய்துக்கொண்டார். 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்த்து வந்த அவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரிந்தனர்.

தற்போது தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கௌதமி. இந்நிலையில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுப்புலட்சுமி, தனது அம்மா கௌதமியுடன் இருக்கும் கார்த்திகை தின ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

