திருநங்கை வேடத்தில் தலைவர் 'ஜிபி முத்து'- வைரல் போஸ்டர்.

photo

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய பலருள் தலைவர் ஜிபி முத்துவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் இது வரை சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த ஜிபி முத்து தற்போது கதையின் மைய்ய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் அவர் திருநங்கை வேடமணிந்துள்ளார்.

photoடிக்டாக் மூலமாக பிரபலமானவர்  ஜிபி.முத்து. அவருக்கு  ஆயிரகணக்கில் ரசிகர்கள் வர காரணம் அவரின் தென்மாவட்டத்திற்கே உரித்தான எதார்த்தமான பேச்சுதான். மரக்கடை நடத்தி வந்த அவர் தனது தனித்துவமான திறமை, கல்லம் கபடமில்லா பேச்சு ஆகியவற்றால் கோலிவுட் வரை உயர்ந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் குக்வித் கோமாளி, பிக்பாஸ் என பட்டையை கிளப்பிய இவருக்கு அடித்த ஜாக்பாட்தான் ஆர்வம் என்ற திரைப்படம்.

photo

அந்த படத்தில் ஜிபி முத்து பெண் வேடமணிந்து நடித்துள்ளார். அது தொடர்பான ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this story