சன்னி லியோன்னா யாருன்னு தெரியாது.. ஆடியோ விழாவை கலகலப்பாக்கிய ஜிபி முத்து !

gp muthu

சன்னி லியோன் என்றால் எனக்கு யாரென்று தெரியாது என ஜிபி முத்து கூறியது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சதீஷ், யோகி பாபு, ஜிபி முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன், ஜிபி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சன்னி லியோனுக்கே பால்கோவா ஊட்டி ஜிபி முத்து மேடையையே கலகலப்பாக மாற்றினார். 

gp muthu

இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து, நான்  நடித்துள்ள முதல் படம் இந்த படம்தான். சின்ன சின்ன குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அதுதவிர டிக்டாக் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறேன். முதலில் படம் நடிக்க பயமாக இருந்தது. இயக்குனர் தான் எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார். அதேபோன்று சன்னி லியோன் என்றால் யாரென்றே தெரியாது. அதன்பிறகு சில படங்களை காட்டி இவர் தான் சன்னி லியோன் என்றார்கள். இதை சொல்லும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

gp muthu

அப்போது விளக்கம் கொடுத்த ஜிபி முத்து படம் என்றால் நீங்கள் நினைப்பது போன்று இல்லை. புகைப்படங்களை காட்டினார்கள் என்று கூறினார். இந்த படத்தில் நான் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரை நினைத்தாலே எனக்கு சிரிப்பு வருகிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரம் அது. அதனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்த்து நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள். எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி என்று கூறினார். ஜபி முத்து பேசிய சில நிமிடங்கள் மேடையே கலகலப்பானது.  


 

Share this story