‘தல’யுடன் இணையும் ‘தலைவர்’……..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

photo

 டிக்டாக் புகழ் ஜி பி முத்துவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தனக்கு எதிராக வரும் அத்தனை பந்துகளையும் தனக்கே உரிய யதார்த்தமான பேச்சால் உயர்த்தி அடித்து வருவதுதான்.  இவர் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டு ரசிகர்களை குஷி படுத்துவார் என எதிர்பார்க்க பட்ட நிலையில் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விஷயம் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், அவரது தந்தை பாசத்தை நினைத்து நெகிழ்ந்து போனார்கள் ரசிகர்கள்.

photo

தொடர்ந்து சன்னிலியோனின் நடிப்பில் உருவான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடித்திருந்த ஜி பி முத்து, அந்த படத்தின் இசை வெளியீட்டு விழவில் கலந்துக்கொண்டு பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இன்று தலைவர் ஜி பி முத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜி.பி முத்துவை காண ஏராளமான  ரசிகர்கள் திரண்டனர்.  அவரை பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தை கண்டு அவரே மிரண்டுபோனார் என்றுதான் சொல்ல வேண்டும்.

photo

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.பி முத்துவிடம் சன்னிலியோனுடன் இணைந்து நடித்தது குறித்து கோள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு தலைவர் “சன்னி லியோனுடன்  இணைந்து நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் விரைவில் நடிகர் அஜித்துடன்  இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்”.

photo

இந்த ஒரு தகவலால்  ஜிபி முத்து  ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story