ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாபெரும் திரைப்படங்கள்

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாபெரும் திரைப்படங்கள்

இரு பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளன. 

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாபெரும் திரைப்படங்கள்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்பதாலும், இந்த படத்துக்கு போட்டியாக வெளியான ஜப்பான் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாததாலும் ஜிகர்தண்டா படத்தின் வசூல் அதிகரித்தது. இத்திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வௌியாகி உள்ளது. 

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மாபெரும் திரைப்படங்கள்

காமிக்ஸுடன் இணைந்து, நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் புதிய சீரிஸ் மூலமாக பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர். டைகர் பேபி (ஜோயா அக்தர் மற்றும் ரீமா காக்டி) மற்றும் கிராஃபிக் இந்தியா (ஷரத் தேவராஜன்) ஆகியோரால் காமிக்ஸின் திரைப்படத் தழுவலான தி ஆர்ச்சீஸ், நெட்ஃபிக்ஸ்-ல் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது. 1960-களின் இந்தியாவில் லைவ் ஆக்ஷன் இசைத் தொகுப்பான இந்தப் படத்தை ஜோயா அக்தர் இயக்குகிறார். ஆர்க்கி காமிக்ஸ்,  மூலம்  அமிதாப் பச்சனின் பேத்தி அகஸ்தியநந்தா, ஷாருக்கானின் மகள் சுஹானா கான், ஸ்ரீதேவியின் மகள் குஷிகபூர் ஆகியோர் இந்த சீரிஸ் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்.
 

Share this story